திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையை நொறுக்கிய 15 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையை நொறுக்கிய 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 7:26 PM GMT)

திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையை நொறுக்கிய 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் 2 முறை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது.

கடையின் மேற்பார்வையாளராக ரவிச்சந்திரன் (வயது 49) உள்ளார். விற்பனையாளர்களாக ஆனந்தன், பாபு ஆகியோர் உள்ளனர்.

15 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கற்களை வீசி கடையை நொறுக்கினர். கடைக்குள் புகுந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை சேதப்படுத்தினர். கடையின் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், விற்பனையாளர்கள் ஆனந்தன், பாபு ஆகியோரையும் தாக்கினர்.

இது குறித்து மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையை நொறுக்கியதாக பொன்ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story