நெல்லை மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நாளை நடக்கிறது


நெல்லை மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 9 Nov 2018 3:00 AM IST (Updated: 9 Nov 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நாளை நடக்கிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நாளை நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

குறைதீர்வு முகாம்

நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் மாதந்தோறும் தாலுகா அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் 2-வது சனிக்கிழமை அன்று பொது வினியோக திட்டம் தொடர்பாக குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி நாளை (சனிக்கிழமை) நுகர்வோர் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது.

நெல்லை தாலுகாவில் டவுன் சேனையர் தெரு, பாளையங்கோட்டை தாலுகாவில் ரெட்டியார்பட்டி, சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர், தென்காசி தாலுகா சில்லரைபுரவு, செங்கோட்டை தாலுகா கணக்குபிள்ளைவலசை, சிவகிரி தாலுகா திருமலாபுரம், வீரகேரளம்புதூர் தாலுகா கீழச்சுரண்டை ஆகிய ஊர்களில் முகாம்கள் நடைபெறுகிறது.

ஆலங்குளம்

ஆலங்குளம் தாலுகாவில் நவநீதகிருஷ்ணபுரம், அம்பை தாலுகா வடக்கு பாப்பான்குளம், நாங்குநேரி தாலுகா களக்காடு, ராதாபுரம் தாலுகா அண்ணாநகர், திசையன்விளை தாலுகா குமாரபுரம், கடையநல்லூர் தாலுகா முத்துசாமிபுரம், திருவேங்கடம் தாலுகா சங்குபட்டி, மானூர் தாலுகா மேலபிள்ளையார்குளம், சேரன்மாதேவி தாலுகா புதுக்குடி ஆகிய ஊர்களில் குறைதீர்வு முகாம்கள் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story