மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 4:00 AM IST (Updated: 9 Nov 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.

கரூர்,

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி நேற்று இரவு கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு, கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில் பாதிப்படைந்து லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இதனை ஈடு செய்வதற்கு மாற்று முறை தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜாமுகமது, காதர்பாட்ஷா, அரவந்த் உள்பட சி.ஐ.டி.யு.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story