மாவட்ட செய்திகள்

போளூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை + "||" + The girl committed suicide by burning near Polur - Assistant Collector investigation

போளூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

போளூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
போளூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
போளூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 26), கூலித் தொழிலாளி. இவருக்கும் அத்திமூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் அம்சவள்ளிக்கும் (23) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ்ராஜ் (3) என்ற மகன் உள்ளார்.


அசோகன் தினமும் மது குடித்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது. பலமுறை அம்சவள்ளி கணவரிடம் குடியை நிறுத்துமாறு வலியுறுத்தி வந்தார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் அம்சவள்ளியின் தொடர் முயற்சியால் அசோகன் ‘இனி குடிக்க மாட்டேன்’ என்று கூறி சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்சவள்ளி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தீபாவளியன்று அசோகன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்சவள்ளி, சத்தியம் செய்து விட்டு குடித்து விட்டு வருகிறாயா? என்று கேட்டு அவரது கணவரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அம்சவள்ளி நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அம்சவள்ளியை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அம்சவள்ளிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், ஆரணி உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்

1. குன்றத்தூர் அருகே கோவில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே கோவில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டனர்.
2. கள்ளக்காதல் தகராறில் பெண் அடித்துக்கொலை - தப்பிஓடிய கணவருக்கு வலைவீச்சு
போளூரில் கள்ளக்காதல் தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தப்பிஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பதவியேற்பு
ராணிப்பேட்டையின் உதவி கலெக்டராக இளம்பகவத் பொறுப்பேற்றுக்கொண்டார்.
4. தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
கும்மிடிப்பூண்டி அருகே தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
5. திருநின்றவூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
திருநின்றவூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.