நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம் தேவேகவுடா பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்று சந்திரபாபுநாயுடுவை சந்தித்த பிறகு தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்று சந்திரபாபுநாயுடுவை சந்தித்த பிறகு தேவேகவுடா கூறினார்.
சந்திரபாபுநாயுடு பேட்டி
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு என்னை சந்தித்து பேசினார். மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அகற்றுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். நாடு முழுவதும் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்பட மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம். பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிடுவது அவசியம் ஆகும்.
அதுகுறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம். அவர் ஏற்கனவே ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை (அதாவது இன்று) சந்தித்து பேச உள்ளார். அதே போல் மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்து பேச இருக்கிறார்.
காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும்
இந்த முயற்சிக்கு தேசிய கட்சியான காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸகார் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அகற்றுவது தான் எங்கள் நோக்கம்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
இந்த பேட்டியின்போது, முதல்-மந்திரிகள் சந்திரபாபுநாயுடு, குமாரசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story