மாவட்ட செய்திகள்

பெலகாவி அருகே "பிரேக்" பிடிக்காததால்ரெயில் தண்டவாளத்தில் குறுக்கே நின்ற அரசு பஸ்40 பயணிகள் உயிர் தப்பினர் + "||" + Because "brake" does not like near Pelakovi The government bus crossing the railway track

பெலகாவி அருகே "பிரேக்" பிடிக்காததால்ரெயில் தண்டவாளத்தில் குறுக்கே நின்ற அரசு பஸ்40 பயணிகள் உயிர் தப்பினர்

பெலகாவி அருகே "பிரேக்" பிடிக்காததால்ரெயில் தண்டவாளத்தில் குறுக்கே நின்ற அரசு பஸ்40 பயணிகள் உயிர் தப்பினர்
பெலகாவி அருகே பிரேக் பிடிக்காததால் ரெயில் தண்டவாளத்தில் குறுக்கே அரசு பஸ் நின்று விட்டது. ரெயில்வே ஊழியரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் உயிர் தப்பினர்.
பெலகாவி, 

பெலகாவி அருகே பிரேக் பிடிக்காததால் ரெயில் தண்டவாளத்தில் குறுக்கே அரசு பஸ் நின்று விட்டது. ரெயில்வே ஊழியரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் உயிர் தப்பினர்.

தண்டவாளத்தில் குறுக்கே நின்ற அரசு பஸ்

பெலகாவி மாவட்டம் கானாப்பூர் தாலுகா கோதகெரி கிராமத்தில் உள்ள ரெயில்வே கேட் அருகே நேற்று அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது அந்த வழியாக ரெயில் செல்ல இருந்ததால், ரெயில்வே கேட்டை ஊழியர் அடைத்து வைத்திருந்தார். இந்த நிலையில், ரெயில்வே கேட் அருகே வந்த பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வே கேட்டை இடித்து தள்ளிவிட்டு தண்டவாளத்தின் குறுக்கே நின்றது. இதை பார்த்து ரெயில்வே ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். அந்த சந்தர்ப்பத்தில் தண்டவாளத்தில் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

பயணிகள் உயிர் தப்பினர்

உடனே சுதாரித்து கொண்ட ரெயில்வே ஊழியர், தன்னிடம் இருந்த சிவப்பு கொடியை காட்டி சிறிது தூரத்தில் வைத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் தண்டவாளத்தில் நின்ற அரசு பஸ் மீது ரெயில் மோதுவது தவிர்க்கப்பட்டது. அத்துடன் பஸ்சில் இருந்த 40 பயணிகளும் உயிர் தப்பினார்கள். பின்னர் தண்டவாளத்தில் நின்ற பஸ் சிறிது தூரத்தில் தள்ளிவிடப்பட்டது. அதன் பிறகு, அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அரசு பஸ்சில் "பிரேக்" பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வே கேட்டை இடித்து தள்ளிவிட்டு தண்டவாளத்தில் நின்றது தெரியவந்துள்ளது.