மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா:சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார்திரளான பக்தர்கள் தரிசனம் + "||" + Kandasatti festival in Thiruchendur: Swami in Shanmugilasam Mandapam Jayantinathar got up

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா:சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார்திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா:சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார்திரளான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளல்

மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘, ‘கந்தனுக்கு அரோகரா‘ போன்ற பக்தி கோஷங்களை எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, மீண்டும் கோவில் சேர்ந்தார்.

விரதம் இருக்கும் பக்தர்கள்

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோவில் கலையரங்கம், விடுதிகள், மண்டபங்கள், தற்காலிக கூடாரங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். விரதம் இருக்கும் பக்தர்கள் முருகபெருமானின் திருநாமத்தை உச்சரித்தும், கந்தசஷ்டி கவசத்தை பாடியும் வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.