நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் பாதித்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பா? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் பாதித்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பா? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:45 PM GMT (Updated: 9 Nov 2018 7:05 PM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் பாதித்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் பாதித்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.

பன்றிக்காய்ச்சல்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகராட்சி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நோய் உற்பத்தி செய்யும் கொசு புழுக்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

எனினும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதற்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. தினந்தோறும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள்.

அவர்களின் காய்ச்சலின் தன்மைக்கு ஏற்ப உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். சிறப்பு வார்டில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் இதுவரை 23 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கர்ப்பிணி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர், நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது அன்னலட்சுமி 8 மாத கார்ப்பிணியாக உள்ளார். இவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அதில் பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவரை உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காய்ச்சல் பற்றி விவரத்தை கூறி வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் கர்ப்பிணி பெண்ணை ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியானது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து நெல்லை சுகாதார பணிகளின் துணை இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:- பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். காப்பிணி அன்னலட்சுமி ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றார். காய்ச்சலின் தீவிரம் குறைந்து விட்டதால் அவரை வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். அவர் சிறப்பு வார்டில் சேர்ந்து சிகிச்சை பெற்றால், மேலும் காய்ச்சல் அதிகமாகி விடும் என்ற காரணத்தால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தி இருகிறார்கள். சுகாதாரத்துறை சார்பில் வீட்டில் உள்ள 6 பேருக்கும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு மாத்திரை கொடுத்து இருக்கிறோம். காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Next Story