நெல்லையில் இலவச சட்ட விழிப்புணர்வு வாகனம் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்
நெல்லையில் இலவச சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லையில் இலவச சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
சட்டப்பணிகள் ஆணைய சட்டம்
சட்டப்பணிகள் ஆணையச் சட்டம் தமிழ்நாட்டில் 9-11-1997 அன்று அமலுக்கு வந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 9-ந் தேதி சட்டப்பணிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கிராமங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ளவர்களுக்கு இலவச சட்ட சேவைகள் கிடைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டு உள்ளது.
விழிப்புணர்வு வாகனம்
அதன்படி நெல்லை கோர்ட்டில் இருந்து இலவச சட்ட விழிப்புணர்வு வாகனம் நேற்று காலை புறப்பட்டு சென்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ராஜசேகர் தலைமை தாங்கி, பச்சை கொடி அசைத்து விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நீதிபதிகள் அருள்முருகன், கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர், சந்திரா, தனஜெயன், கார்த்திகேயன், நெல்லை வக்கீல் சங்க தலைவர் சிவசூர்ய நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாகனம் நெல்லை புதிய பஸ் நிலையம், சந்திப்பு ரெயில் நிலையம், முக்கிய கடை வீதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்கிறது. வருகிற 18-ந் தேதி வரை இந்த வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுவின் செயலாளர் (பொறுப்பு) ஹேமானந்த குமார் செய்து இருந்தார்.
Related Tags :
Next Story