மெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 7 பேர் கைது
மெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மராட்டியத்தில் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை பட்டாசு வெடித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. எனவே பட்டாசு வெடிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த மாநில போலீசுக்கு மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
மான்கூர்டு பகுதியில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக அடையாளம் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
7 பேர் கைது
இந்த நிலையில், பெரிய தீபாவளி தினமான கடந்த புதன்கிழமை அன்று மும்பை மெரின்டிரைவ் பகுதியில் இரவு 10 மணியை தாண்டி நள்ளிரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பதாக போலீசுக்கு புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, பட்டாசு வெடித்து கொண்டிருந்த 7 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல மும்பை பெருநகரம் முழுவதும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி நள்ளிரவு நேரத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story