ஸ்கிம்மர் கருவி மூலம் டெபிட் கார்டு தகவல்களை திருடி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் அபேஸ் பார் மேலாளர் உள்பட 4 பேர் கைது

ஸ்கிம்மர் கருவி மூலம் டெபிட் கார்டு தகவல்களை திருடி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் அபேஸ் பார் மேலாளர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 4:30 AM IST (Updated: 10 Nov 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கிம்மர் கருவி மூலம் டெபிட் கார்டு தகவல் களை திருடி வியாபாரியிடம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்த பார் மேலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

ஸ்கிம்மர் கருவி மூலம் டெபிட் கார்டு தகவல் களை திருடி வியாபாரியிடம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்த பார் மேலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி

மும்பை செம்பூரை சேர்ந்த வியாபாரி குணால் தீபக். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்றிருந்தார். பின்னர் அதற்கான கட்டணம் செலுத்த டெபிட் கார்டை கொடுத்து உள்ளார். இந்தநிலையில், சில நாட்கள் கழித்து குணால் தீபக்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து திலக்நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசீன் உதவியுடன் மோசடி கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் கைது

இதில் பார் மேலாளர் மகேஷ் கோண்டா (வயது45) என்பவர் போலீசாரிடம் சிக்கினார். இவர் தான் குணால் தீபக்கின் டெபிட் கார்டின் தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடி உள்ளார். பின்னர் அவரின் கூட்டாளி முகமது சலேம் என்பவர் டெபிட் கார்டை போலியாக தயாரித்து ஏ.டி.எம். மையத்தில் பணத்தை திருடியது தெரியவந்தது. அருண் குமார், நவுசாத் ரகீம் ஆகிய 2 பேருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் பார் மேலாளர் உள்பட 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story