மாவட்ட செய்திகள்

சர்க்கரை ஆலையை திறக்க கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + All the unions of the Alliance Demonstration

சர்க்கரை ஆலையை திறக்க கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சர்க்கரை ஆலையை திறக்க கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுக்காலை அவர்கள் புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். முனுசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 20 மாத சம்பளத்தை தர வேண்டும், 2 ஆண்டுகால தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கான லே–ஆப்பை ரத்து செய்ய வேண்டும், அனைத்து தொழிலாளர்களையும் பணிக்கு அழைத்து வருகிற 18–ந் தேதி சர்க்கரை ஆலையை திறந்து கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் சுப.உதயகுமார் பங்கேற்பு
சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுப.உதயகுமார் கலந்து கொண்டார்.
2. வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
3. பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. மருத்துவமனை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி அனைத்து பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. பணிவரன்முறை செய்ய வலியுறுத்தி, அடுத்த மாதம் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தர்மபுரியில் கு.பாலசுப்பிரமணியன் தகவல்
ரேஷன்கடை பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.