மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Condemned the central government Congress Party Demonstration

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணப்பாறை,

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கியதாக கூறி, மத்திய அரசை கண்டித்து நேற்று நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் ரங்கபூபதி கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் பலர் மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாநகர், புறநகர், வட்டார, நகர நிர்வாகிகள் உள்பட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.


மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண் டன கோஷங்களை எழுப்பினர். இதில் நகரத் தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.