வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.32 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் பங்கேற்று பூமிபூஜையில் பங்கேற்று வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
மேலும் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரு உயர் கோபுர எல்.இ.டி மின்விளக்குகளை அவர்கள் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.சவுதாபுரம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையை பலப்படுத்தும் பணி, ரூ.23.18 லட்சம் மதிப்பீட்டில் ஓ.சவுதாபுரம் முதல் அவாரங்குட்டை மொஞ்சனூர் ஊராட்சி எல்லை வரை சாலை புதுப்பித்தல் பணி, ரூ.17.95 லட்சம் மதிப்பீட்டில் ஓலைப்பட்டி-அக்கரைப்பட்டி சாலை முதல் ராசாபாளையம் அருந்ததியர் தெரு வரை சாலையை பலப்படுத்தும் பணி மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், தொட்டிப்பட்டி ஊராட்சியில் ரூ.25.20 லட்சம் மதிப்பீட்டில் தொட்டியப்பட்டி முதல் தச்சன்காடு வரை சாலை பலப்படுத்துதல் பணி, வெண்ணந்தூர் பேரூராட்சியில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் ஏரி தூர்வாரும் பணி மற்றும் மேம்பாடு செய்தல் பணி, நெ.3.கொமாரபாளையம் ஊராட்சியில் ரூ.23.90 இலட்சம் மதிப்பீட்டில் கோம்பைக்காடு சாலை கணவாய்க்காடு பிரிவிலிருந்து கோம்பைக்காடு அருந்ததியர் தெரு மயானம் வரை சாலையை பலப்படுத்துதல் பணி, பொன்பரப்பிப்பட்டி ஊராட்சியில் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் மல்லூர் வெண்ணந்தூர் சாலை முதல் ஆலாம்பாளையம் வரை சாலையை புதுப்பித்தல் பணி, தொட்டியவலசு ஊராட்சியில் ரூ.21.60 லட்சம் மதிப்பீட்டில் மோளகவுண்டவலசு வரை சாலையை பலப்படுத்தும் பணி, பல்லவநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் தொட்டியமந்தை முதல் எட்டிக்குட்டை வரை சாலை பலப்படுத்துதல் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெ.3.கொமாரபாளையம் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வெற்றி விகாஸ் பள்ளி அருகில் 16 மீட்டர் எல்.இ.டி. உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும், பொன்பரப்பிப்பட்டி ஊராட்சியில் அண்ணாமலைப்பட்டி அண்ணாமலையார் கோவில் அருகில் 10 மீட்டர் எல்.இ.டி. உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தாமோதரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவண்ணன் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story