மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் மேலும் 6 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் தொடக்கம் + "||" + Banking Scheme will be started in 6 post offices in Kumari district

குமரி மாவட்டத்தில் மேலும் 6 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் மேலும் 6 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் தொடக்கம்
குமரி மாவட்டத்தில் மேலும் 6 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் தொடங்கியுள்ளது.
அருமனை,

தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் அருமனையில் உள்ள தபால் நிலையத்தில் நேற்று வங்கி சேவை திட்ட தொடக்க விழா நடந்தது. இதனை தபால்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர் தொடங்கி வைத்து பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-

தபால்துறை மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. பெண் குழந்தைகளின் நலனுக்காக செல்வ மகள் திட்டம், காப்பீட்டு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களில் ஏழைகளை பொருளாதாரத்தில் முன்னேற்றும் விதமாக வங்கி சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் வங்கிகள் செய்யும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் இங்கு செய்ய முடியும்.

பொதுமக்கள் தொலைபேசியில் தெரிவித்தால் போதும் தபால்காரர் மூலம் வீட்டில் பணம் கொடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் செல்வ மகள் திட்டத்தில் 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வீட்டு வரி, மின் கட்டணம், விமான டிக்கெட், பார்சல் புக்கிங் உள்பட பல்வேறு சேவைகளை தபால்துறை வழங்குகிறது. இன்றைய தினம் (அதாவது நேற்று) அருமனை, திருவட்டார், தக்கலை, நெய்யூர், முளகுமூடு, தாழக்குடி ஆகிய 6 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 11 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட தபால்துறை கிளை மேலாளர் நவீன், குழித்துறை உபகோட்ட ஆய்வாளர் கண்மணி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சுஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அருமனை தபால் மாஸ்டர் சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கென்னடி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் மத்திய மந்திரி பேச்சு
கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே கூறினார்.
2. வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச விழா நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
வயலூர் முருகன் கோவிலில் நேற்று நடைபெற்ற தைப்பூச விழாவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
3. புங்கறை பத்ரகாளியம்மன் கோவிலில் பட்டாபிஷேக விழா
புங்கறை பத்ரகாளியம்மன் கோவிலில் பட்டாபிஷேக விழா நடந்தது.
4. ‘கஜா’ புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு விழா
‘கஜா’ புயல் நிவாரணபணிகளில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
5. வேலைவாய்ப்பிற்கு காத்திருக்காமல் மாணவர்கள் தொழில்முனைவோராக வேண்டும்
வேலை வாய்ப்பிற்கு காத்திருக்காமல் மாணவர்கள் தொழில்முனைவோராக வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசினார்.