குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும்


குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 10:09 PM GMT)

குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டத்தில் விஜயகுமார் எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் சார்பில் தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டம் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தொலைபேசி ஆலோசனைக்குழு தலைவர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கினார். நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் சஜிகுமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் துணைப்பொது மேலாளர்கள் டெல்பின்மேரி, ராஜன், அனிதா மற்றும் கோட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விஜயகுமார் எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

வாடிக்கையாளரின் சேவைதான் பி.எஸ்.என்.எல். வளர்ச்சிக்கான அடிப்படை ஆகும். எனவே தொலைத்தொடர்பு சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குமரி மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீத சேவை அளித்திட தேவையான உபகரணங்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு உயர் கோபுரங்கள் அமைக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சாலைகளில் பணிகள் மேற்கொள்ளும்போது பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துக்கு சொந்தமான கேபிள்கள் பாதிக்கப்படாத வண்ணம் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க ஆவன செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர் சேவையை உயர்த்தும் வண்ணம் 100 புதிய செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.

Next Story