மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் இடைத்தேர்தலில்அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு + "||" + Ottapidaram, Vilathikulam in the by-elections ADMK The higher the votes will win

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் இடைத்தேர்தலில்அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் இடைத்தேர்தலில்அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
தூத்துக்குடி, 

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் புதுக்கோட்டையில் உள்ள மண்டபத்தில் நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டபேரவை துணை தலைவர் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனசாட்சி உள்ளவர்கள்...

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது உடல் நலத்தை பற்றி கவலை படாமல் இந்த ஆட்சியை உருவாக்கினார். இந்த நிலையில் ஜெயலலிதா அமைத்த இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும், தொகுதி மக்களை பற்றி கவலை படாமல் கட்சிக்கு துரோகம் செய்து தி.மு.க.வுடன் ஒரு கூட்டம் கூட்டு சேர்ந்து உள்ளனர். இதனால் தான் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் இந்த ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் இந்த ஆட்சியை குறை சொல்லமாட்டார்கள். விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிக வாக்குகள்

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் வரும் இடைத்தேர்தல், மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக நடத்தப்படுகிற தேர்தல். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. இதுவரை 10 தேர்தல்களை சந்தித்து உள்ளது. அதில் 7 வெற்றிகள் பெற்று உள்ளது. அதே போல் விளாத்திகுளம் 8 வெற்றிகளை பெற்று தந்துள்ளது. தமிழகத்தில் நடக்க உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்த 2 தொகுதிகளில் தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை கட்சி தலைமை தான் தெரியப்படுத்தும். யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டாலும் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., கழக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.