மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில்மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி என்ஜினீயர் பலி + "||" + The bus collided with the motorcycle Engineer kills

கோயம்பேட்டில்மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி என்ஜினீயர் பலி

கோயம்பேட்டில்மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி என்ஜினீயர் பலி
கோயம்பேட்டில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் என்ஜினீயர் உயிரிழந்தார்.
பூந்தமல்லி,

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிரிதரன் (வயது 31), என்ஜினீயராக இருந்து வந்தார். சென்னையில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். கோயம்பேடு நெற்குன்றம் அருகே சென்றபோது திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கிரிதரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் சக்கரம் கிரிதரன் மீது ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார். உடனே வாகன ஓட்டிகள் கிரிதரனை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

என்ஜினீயர் பலி

அங்கு கிரிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி என்ஜினீயர் கிரிதரன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் சீனிவாசன்(42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.