சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு


சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Nov 2018 3:00 AM IST (Updated: 11 Nov 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பட்டாலியன் போலீஸ்காரர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா அய்யாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 25). இவருக்கும், அய்யாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராசுபாண்டியன் மகன் கிருஷ்ணமூர்த்தி (29) என்பவருக்கும் இடையே கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிருஷ்ணமூர்த்தி கோவையில் உள்ள பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார்.

திருமணத்தின்போது கவிதா குடும்பத்தினர் நகையும், பணமும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் பிரச்சினை செய்துள்ளனர். பின்னர் ஊர் தலைவர்கள் மற்றும் மகளிர் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் நடைபெற்றது.

கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல்

இந்நிலையில் கவிதாவிடம், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கவிதா போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவிதா, இதுபற்றி சங்கரன்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நீதிபதி விசாரித்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய சங்கரன்கோவில் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார், கவிதாவின் கணவர் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய தாயார் காந்தி (55), சகோதரி குருலட்சுமி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story