இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 29,674 பேர் எழுதுகிறார்கள்


இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 29,674 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 11 Nov 2018 3:00 AM IST (Updated: 11 Nov 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை நெல்லை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 674 பேர் எழுதுகிறார்கள் என கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை நெல்லை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 674 பேர் எழுதுகிறார்கள் என கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வு மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது.

பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்படும் இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, சங்கரன்கோவில், தென்காசி, ராதாபுரம் ஆகிய 6 தேர்வு மையங்களில் நடக்கிறது. மொத்தம் 98 கல்வி நிலையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நெல்லை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 674 பேர் எழுதுகிறார்கள்.

பறக்கும் படை

இந்த தேர்வை கண்காணிக்க உதவி கலெக்டர் தலைமையில் 12 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வினை வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தடையில்லா மின்சாரம், பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை மூலம் போதிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மையங்களுக்கும் அருகில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது. முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story