குட்கா விற்பனை; 2 பேர் கைது
குட்கா விற்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம், யாதவாள் தெருவில் உள்ள ஒரு கடையில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்காவை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு இங்கிருந்து பல்வேறு கடைகளுக்கு பிரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்த 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்காவை பதுக்கி விற்பனை செய்த கொழுமணிவாக்கத்தை சேர்ந்த நரசிங்கமூர்த்தி (வயது 34), என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செந்தில் என்ற கனகலிங்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
குன்றத்தூர்
குன்றத்தூரை சேர்ந்தவர் ராபின் (36), இவர் குன்றத்தூர் சடையாண்டீஸ்வரர் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் திடீரென அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 25 கிலோ குட்கா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராபினை கைது செய்த போலீசார் 25 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story