வேலப்பாக்கத்தில் அம்மா திட்ட முகாம்


வேலப்பாக்கத்தில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 11 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

வேலப்பாக்கத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 82 பனப்பாக்கம் ஊராட்சியில் உள்ள வேலப்பாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 14 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், வருவாய் ஆய்வாளர் ரமணி, கிராம நிர்வாக அதிகாரிகள் செந்தில்ராஜ், மணி,, ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் சுரேஷ், ஷேக்தாவூத், ஸ்ரீதர், பிரபு ஆகியோர் வரவேற்றனர். முடிவில், கருணாகரன் நன்றி கூறினார்.

Next Story