திருப்பத்தூர் அருகே குண்டர் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது


திருப்பத்தூர் அருகே குண்டர் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது
x
தினத்தந்தி 11 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

வேலூர், 

திருப்பத்தூரை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). அதே கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (22). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் ராமன் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Next Story