கழிவறை பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் உலக கழிவறை தின நிகழ்வுகள் வருகிற 19-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி உலக கழிவறை தின நிகழ்வுகள் வருகிற 19-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கழிவறை பயன்பாட்டை வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளை அனுப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்து கழிவறை பயன்பாட்டை வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளை வழங்கினார்.
அப்போது அவர் கழிவறை பயன்பாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதார ஊக்குனர்களுக்கு ரூ.5 ஆயிரத்திற்கான ஊக்கத்தொகையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story