மருந்து கடைகளில் ஆய்வு; இருவர் மீது வழக்கு


மருந்து கடைகளில் ஆய்வு; இருவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவற்றால் நோயாளிகள் இறக்க நேரிடுகிறது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவற்றால் நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் ஆய்வுக் குழுவினர் பல இடங்களில் ஆய்வு செய்தனர். உடையார்பாளையம் கோட்டத்தில் மீன்சுருட்டி கிராமத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்தாளர் சுப்பிரமணியன் மற்றும் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது ஊசி மற்றும் மருந்துகள் மருத்துவ சீட்டு இல்லாமல் வினியோகம் செய்ததாக மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இறவாங்குடி, பொன்பரப்பி குழுமூர் ஆகிய கிராமங்களில் உள்ள 10–க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் மருந்தாளுனர்கள் யாராவது மருத்துவர்களை போன்று ஊசிபோடுகின்றனரா?, மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வினியோகம் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தார். ஆய்வின்போது மருத்துவர்கள் கையொப்பமிட்ட சீட்டுகளுக்கு மட்டுமே மருந்து வினியோகம் செய்ய வேண்டும். தன்னிச்சையாக மருந்து வினியோகம் செய்ய கூடாது நோயாளிகளுக்கு ஊசி போட கூடாது என்று கூறினர். இதை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த ஆய்வு மேலும் தொடரும் எனவும் கூறினார்.


Next Story