மச்சுவாடியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம்


மச்சுவாடியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 8:55 PM GMT)

மச்சுவாடியில் குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு குதிரைவண்டி, மாட்டுவண்டி பந்தயம் மற்றும் சைக்கிள் போட்டி புதுக்கோட்டை மச்சுவாடியில் நடைபெற்றது. பந்தயத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார். கரிச்சான் மாட்டுவண்டி, புது குதிரை வண்டி, சிறிய குதிரை வண்டி, நடு குதிரைவண்டி பந்தயம் மற்றும் சைக்கிள் போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்றது. இதில் கரிச்சான் மாட்டுவண்டி பிரிவில் 7 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

இதில் திருவப்பூர் சனா பிரதர்ஸ் மாட்டுவண்டி முதல் இடத்தையும், பூவான்டிபட்டி நாச்சியார் மாட்டுவண்டி 2-வது இடத்தையும், அரிமளம் சின்னராசு சேர்வை மாட்டுவண்டி 3-வது இடத்தையும் பிடித்தன. புது குதிரைவண்டி பிரிவில் 28 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் திருச்சி ஸ்ரீரங்கம் சேதுகோனார் குதிரை வண்டி முதல் இடத்தையும், திண்டுக்கல் பழனி ராஜா ராவுத்தர் குதிரை வண்டி 2-வது இடத்தையும், திருச்சி துர்கை அம்மன் வேலுகுண்டு குதிரை வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

சிறிய குதிரை வண்டி பிரிவில் 17 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் திருச்சி உறையூர் விஜயா குதிரை வண்டி முதல் இடத்தையும், வயலூர் சத்திவேல் குதிரை வண்டி 2-வது இடத்தையும், புதுக்கோட்டை மீண்டும் செந்தில்பாலா வேலன் சன்ஸ் குதிரை வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன. நடு குதிரைவண்டி பிரிவில் 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் திருச்சி திருவானைக்காவல் சங்கரன் குதிரை வண்டி முதல் இடத்தையும், புதுக்கோட்டை மீண்டும் செந்தில்பாலா குதிரை வண்டி 2-வது இடத்தையும், செருவாவிடுதி அப்துல்லா குதிரை வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

இதேபோல சைக்கிள் போட்டியில் திருச்சி ஜீவானந்தம் முதல் இடத்தையும், மதுரை மகேஸ்வரன் 2-வது இடத்தையும், திருச்சி குணசேகரன் 3-வது இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டுவண்டி, குதிரை வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Next Story