திப்பு ஜெயந்திவிழா நடைபெறும் நேரத்தில் குழப்பம் மந்திரி ஜமீர்அகமதுகான் அதிருப்தி
திப்பு ஜெயந்தி விழா நடைபெறும் நேரத்தில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து மந்திரி ஜமீர் அகமதுகான் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பெங்களூரு,
திப்பு ஜெயந்தி விழா நடைபெறும் நேரத்தில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து மந்திரி ஜமீர் அகமதுகான் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மந்திரி ஜமீர்அகமதுகான் அதிருப்தி
கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழா நடைபெறும் நேரத்தில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து இந்த விஷயத்தில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து பெங்களூருவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திப்பு ஜெயந்தி விழா காலை 11.30 மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு அந்த விழா மாலை 6.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக எனக்கு மந்திரி ஜெயமாலா தகவல் தெரிவித்தார். அதனால் விழாவுக்கு மாலை 6.30 மணிக்கு வரும்படி அனைவரிடமும் கூறினேன்.
பெயரை அச்சிட வேண்டாம்
ஆனால் இங்கு காலையிலேயே விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இதுபற்றி சரியான தகவல் வரவில்லை. இது எனது துறை விழா இல்லை. மந்திரி ஜெயமாலா தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். சிங்கப்பூருக்கு சென்ற துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மதியம் 3.30 மணிக்கு வந்துவிடுவார் என்றும், மாலையில் அவர் விழாவில் கலந்து கொள்வார் என்றும் என்னிடம் கூறப் பட்டது.
ஆனால் திடீரென காலையிலேயே விழா நடக்கிறது. விழா நடைபெறும் நேரத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. திப்பு ஜெயந்தி விழாவில் தனது பெயரை அச்சிட வேண்டாம் என்று குமாரசாமி கூறினார். முன்பு வால்மீகி ஜெயந்தி விழாவில் தனது பெயர் அச்சிடப்பட்டு இருந்ததாகவும், உடல்நலக்குறைவால் அந்த விழாவில் பங்கேற்க இயலாமல் போய் விட்டது என்றும் கூறினார்.
அத்தகைய விமர்சனத்தை...
இதனால் கடுமையான விமர்சனம் எழுந்ததாகவும், அதனால் அழைப்பிதழில் பெயர் அச்சிட்டால், மீண்டும் அத்தகைய விமர்சனத்தை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்றும் முதல்-மந்திரி கூறினார். அவர் கேட்டுக் கொண்டதை அடுத்து அழைப்பிதழில் குமாரசாமியின் பெயர் சேர்க்கப்படவில்லை.
இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.
Related Tags :
Next Story