‘காபி’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த ஒப்பந்ததாரர் கைது


‘காபி’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த ஒப்பந்ததாரர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 11:42 PM GMT (Updated: 10 Nov 2018 11:42 PM GMT)

வேலை கேட்டு வந்த இளம்பெண்ணை காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்த ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

வேலை கேட்டு வந்த இளம்பெண்ணை காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்த ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

வேலை கேட்டு வந்தார்

மும்பை மலாடை சேர்ந்தவர் சந்தோஷ் சிங். இவர் பிலிம் சிட்டியில் தொழிலாளர் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 22 வயது இளம்பெண் இவரிடம் வேலை கேட்டு வந்தார். பிலிம் சிட்டியில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறிய அவர் சம்பவத்தன்று இளம்பெண்ணை அங்கு அழைத்து உள்ளார்.

இதனை நம்பி வந்த இளம்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த காபி கொடுத்து உள்ளார். அதை குடித்ததும் இளம்பெண் மயங்கி விழுந்தார்.

கற்பழிப்பு

இதையடுத்து சந்தோஷ் சிங் இளம்பெண்ணின் ஆடைகளை களைந்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் இளம்பெண்ணை கற்பழித்து உள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் அவரிடம் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது சம்பவத்தை வெளியில் கூறினால் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக சந்தோஷ் சிங் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் சிங்கை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story