தஞ்சை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 715 பேர் குரூப்–2 தேர்வு எழுதினர்


தஞ்சை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 715 பேர் குரூப்–2 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 5:06 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 715 பேர் குரூப்–2 தேர்வை எழுதினர்.

தஞ்சாவூர்,

தமிழகம் முழுவதும் அரசு துறையில் நகராட்சி ஆணையர், வேலை வாய்ப்புத்துறை இளநிலை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 1,199 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்–2 தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

 தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 64 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது.


தஞ்சை மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 ஆயிரத்து 303 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 13 ஆயிரத்து 715 பேர் தேர்வு எழுதினர். 4 ஆயிரத்து 588 பேர் தேர்வு எழுத வரவில்லை.

 தேர்வு எழுத வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டித்தேர்வில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க ஒவ்வொரு தேர்வு கூடத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தார். வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன. தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையங்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ. சுரேஷ், தாசில்தார் அருணகிரி மற்றும் அதிகாரிகள் நேரடியாக சென்று சோதனை நடத்தினர்.

Next Story