அரூர் அருகே பிளஸ்-2 மாணவி பலாத்கார வழக்கில் வாலிபர் அதிரடி கைது
அரூர் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரூர்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச்சேர்ந்த சதீஷ் (வயது22), ரமேஷ் (22) ஆகியோரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சதீஷ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஏற்காட்டுக்கு விரைந்து சென்று சதீசை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ரமேசை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story