சென்னை போரூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சென்னை போரூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

போரூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை போரூர், நியூ காலனியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது 36). இவர், நெற்குன்றத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோஸ்லின் மேரி (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும், மகன்களுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றுவிட்டனர்.

ஆனால் இந்த தகராறில் மனம் உடைந்த ரோஸ்லின் மேரி, தூக்கம் வராமல் பரிதவித்தபடி இருந்தார். கணவர் மற்றும் மகன்கள் தூங்கிய பிறகு அவர், மற்றொரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நள்ளிரவில் எழுந்த இமானுவேல், அருகில் படுத்திருந்த மனைவியை காணாததால் அருகில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அங்கு ரோஸ்லின் மேரி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட ரோஸ்லின் மேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story