கோவில்பட்டி கோட்டத்தில் கறவை பசுக்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
கோவில்பட்டி கோட்டத்தில் கறவை பசுக்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
கோவில்பட்டி கோட்டத்தில் கறவை பசுக்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
கறவை பசு
தமிழக அரசு வழங்கும் சிறப்பு திட்டமான இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் 2018-19-ம் ஆண்டுக்கு டிசம்பர் 2018, ஜனவரி 2019 ஆகிய மாதங்களில் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி கொடியன்குளம், மீனாட்சிபுரம், தெற்குகல்மேடு, அருண்குளம், தலைக்கட்டுபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
16-ந் தேதி
இதற்கு வசதியாக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இலவச கறவைப்பசு பெற விரும்பும் பெண் பயனாளிகள் அந்தந்த பஞ்சாயத்துகளில் நடக்கும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு கறவை பசுக்கள் பெற விண்ணப்பம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 23-ந் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபையில் தேர்வு குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story