மாவட்டம் முழுவதும் குரூப்-2 தேர்வை 9,041 பேர் எழுதினர்


மாவட்டம் முழுவதும் குரூப்-2 தேர்வை 9,041 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:15 AM IST (Updated: 12 Nov 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 9,041 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 3,196 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேனி,


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. இந்த தேர்வுக்காக தேனி மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 237 பேருக்கு தேர்வுக்கூட நுழைவு அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டு இருந்தது.

மாவட்டத்தில் மொத்தம் 47 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங் களுக்கு வினாத்தாள் கள் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டன. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்டன.

இந்த தேர்வை கண்காணிக் கும் பணியில் 47 தணிக்கை அலுவலர்கள், 9 திடீர் தணிக்கை அலுவலர்கள், 8 பறக்கும் படை அலுவலர்கள், 47 தலைமை அறை கண்காணிப்பு அலுவலர்கள், 612 அறை கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 9,041 பேர் தேர்வு எழுதினர். 3,196 பேர் தேர்வு எழுத வரவில்லை. கோட்டூர், முத்துதேவன்பட்டி உள்ளிட்ட தேர்வு மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story