புதியம்புத்தூர் அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் சாவு
புதியம்புத்தூர் அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஓட்டப்பிடாரம்,
புதியம்புத்தூர் அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிறுவன்
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள புளியமரத்து அரசடியை சேர்ந்தவர் முத்துமுனியசாமி (வயது 37) விவசாயி. இவருடைய மனைவி பிரவினா. இவர்களுக்கு வசந்த் (16), நதியா (13), சரண் (11) ஆகிய குழந்தைகள் உண்டு.
சரண் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுடைய பாட்டி முத்துலட்சுமி நேற்று கரிசல்காட்டில் விவசாயப்பணிக்கு சென்று இருந்தார். அவருடன் சரணும் சென்றான். மாலை 3 மணி அளவில் சரண் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனியாக வீட்டுக்கு திரும்பி உள்ளான்.
சாவு
அப்போது அந்த பகுதியில் உள்ள ஊருணியில் குளிப்பதற்காக சரண் சென்று உள்ளான். எதிர்பாராத விதமாக ஊருணியில் ஆழமான பகுதியில் சரண் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த முத்துலட்சுமி, வீட்டில் சரணை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது, ஊருணியில் மூழ்கி சரண் இறந்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஊர்மக்கள் சரண் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story