தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கூடங்களில் காய்ச்சல் பாதித்த மாணவர்களின் விவரத்தை தெரியப்படுத்த வேண்டும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காய்ச்சல் பாதித்த மாணவர்களின் விவரங்களை சுகாதார துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காய்ச்சல் பாதித்த மாணவர்களின் விவரங்களை சுகாதார துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி கூறினார்.
விழிப்புணர்வு பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறது.
இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி தூத்துக்குடியில் நடந்தது.
பயிற்சிக்கு தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) வசந்தா முன்னிலை வகித்தார்.
மாணவர்களின் விவரங்கள்
பயிற்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி பேசியதாவது:-
மாணவ-மாணவிகளுக்கு கை கழுவும் முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் உள்ள மாணவர்களின் விவரம் பள்ளி கல்வித்துறை மூலம் சேகரித்து சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும்.
பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காத வகையில் பாதுகாக்க ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆசிரியர் பொறுப்பு எடுத்து கொசு உற்பத்தி காரணிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை தினமும் சேகரித்து பள்ளிக் கல்வித்துறை மூலம் சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் மட்டுமின்றி ஆசிரியர் கள் பள்ளிக்கு அருகில் உள்ள வீடுகளிலும் கொசு உற்பத்தியாகாத வகையில் தடுக்கவிழிப் புணர்வு ஏற்படுத்த வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பயிற்சியில் மாவட்ட பயிற்சி மருத்துவர் விமோனிஷ், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆனந்தன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story