கூட்டுறவு வாரவிழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நெல்லையில் நாளை மறுநாள் நடக்கிறது


கூட்டுறவு வாரவிழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நெல்லையில் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 12 Nov 2018 3:00 AM IST (Updated: 12 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வாரவிழாவையொட்டி நெல்லையில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நாளை மறுநாள் நடக்கின்றன.

நெல்லை, 

கூட்டுறவு வாரவிழாவையொட்டி நெல்லையில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நாளை மறுநாள் நடக்கின்றன.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரியதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

போட்டிகள்

65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடக்கிறது.

பேச்சுப்போட்டி காலை 11 மணிக்கும், கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி பிற்பகல் 3 மணிக்கும் நடைபெறும். பேச்சுப் போட்டிகள் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படும். ஓவியப்போட்டி 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

பங்கேற்பது எப்படி?

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் படிப்பதற்கான அத்தாட்சி கடிதம் பெற்று போட்டிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு நெல்லை சந்திப்பில் நடைபெறும் கூட்டுறவு வாரவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story