மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 27,157 பேர் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு


மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 27,157 பேர் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 7:32 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 27 ஆயிரத்து 157 பேர் எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

சேலம், 

தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 104 மையங்களில் குரூப்-2 தேர்வு நடந்தது. இதில் சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு 104 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மொத்தம் 36 ஆயிரத்து 274 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 27 ஆயிரத்து 157 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 9 ஆயிரத்து 117 பேர் தேர்வு எழுத வரவில்லை. வருகை சதவீதம் 74.87 ஆகும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில், தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 35 பறக்கும்படை, 14 கண்காணிப்பு குழு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story