நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் முன்னாள் மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் முன்னாள் மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2018 4:00 AM IST (Updated: 12 Nov 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

கொள்ளேகால், 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று முன்னாள் மந்திரியும், கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

முன்னாள் மந்திரியும், கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான ஈஸ்வர் கன்ட்ரே நேற்று முன்தினம் சாம்ராஜ்நகருக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திப்பு ஜெயந்தி

கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திப்பு சுல்தான், இந்துக்களுக்கு விரோதியானவர் என்றும், அவர் இந்து கோவில்களை இடித்துள்ளார் என்றும் பா.ஜனதா வினர் கூறி வருகின்றனர்.

ஆனால் திப்பு சுல்தான் கையில் அணிந்திருந்த மோதிரத்தில் ராம் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இது தெரியாமல் பா.ஜனதாவினர் பேசி வருகின்றனர். திப்பு சுல்தான் சாம்ராஜ்நகரில் உள்ள செங்கேரி, மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணா, மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட நஞ்சன்கூடு ஆகிய பகுதிகள் வளர்ச்சி அடைய பாடுபட்டுள்ளார்.

ஒருநாள் போதாது

அவர் செய்த தொண்டுகளை கூறுவதற்கு ஒருநாள் போதாது. கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் பா.ஜனதாவினருக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்ேதர்தல் நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார்.

இவ்வாறு ஈஸ்வர கன்ட்ரே கூறினார்.

Next Story