நாக்பாடா, கொலபாவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து மாடியில் சிக்கி தவித்தவர்கள் மீட்பு


நாக்பாடா, கொலபாவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து மாடியில் சிக்கி தவித்தவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 4:30 AM IST (Updated: 12 Nov 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

நாக்பாடா, கொலபாவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் சிக்கி தவித்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

மும்பை, 

நாக்பாடா, கொலபாவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் சிக்கி தவித்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தீ விபத்து

மும்பை நாக்பாடாவில் அல் மோயின் டவர் என்ற அடுக்குமாடி கட்டித்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 10-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து பதறி போன குடியிருப்புவாசிகள் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கினார்கள். இருப்பினும் பலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாடியில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்து கொண்டிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து நாக்பாடா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலபாவில்...

கொலபா அப்போலா பந்தர் பகுதியில் 10 மாடி கொண்ட ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று மதியம் 1.30 மணி அளவில் பயிற்சி மையத்தின் 9-வது மாடியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story