தானே ரெயில் நிலையத்தில் வாலிபருக்கு அடி-உதை மானபங்கம் செய்ததால் இளம்பெண் ஆவேசம்
தானே ரெயில் நிலையத்தில் தன்னை மானபங்கம் செய்த வாலிபரை சரமாரியாக தாக்கி இளம்பெண் போலீசில் ஒப்படைத்தார். அவர் வாலிபரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தானே,
தானே ரெயில் நிலையத்தில் தன்னை மானபங்கம் செய்த வாலிபரை சரமாரியாக தாக்கி இளம்பெண் போலீசில் ஒப்படைத்தார். அவர் வாலிபரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானபங்கம்
தானே கல்வாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று குர்லா செல்வதற்காக தானே ரெயில் நிலையத்திற்கு வந்து இருந்தார். அப்போது, 6-ம் எண் பிளாட்பாரத்தில் வந்த விரைவு மின்சார ரெயிலில் ஏற முயன்ற போது, வாலிபர் ஒருவர் திடீரென அவரது உடலில் தொடக்கூடாத இடத்தை தொட்டு மானபங்கம் செய்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் ரெயிலில் ஏறாமல் அந்த வாலிபரை பிடித்தார். மேலும் அவரை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்து பயணிகள் அங்கு திரண்டனர்.
சரமாரி தாக்குதல்
அவர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைப்பதற்கு பதிலாக இளம்பெண் அவரை அடிப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இதையடுத்து அந்த இளம்பெண்ணே அந்த வாலிபரை ரெயில்வே போலீசாரிடம் இழுத்து சென்று ஒப்படைத்தார்.
ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்.ஏ.யாதவ் (வயது23) என்பதும், தற்போது தானே மாவட்டம் பத்லாப்பூரில் வசித்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஏ.யாதவை அந்த இளம்பெண் சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story