உருக்கு நிறுவனத்தில் வேலை
உருக்கு ஆலை நிறுவனத்தில் அதிகாரி மற்றும் அலுவலக பணியிடங்களுக்கு 205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய உருக்கு ஆணை நிறுவனம் சுருக்கமாக செயில் (SAIL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலம் உள்பட, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகிறது. தற்போது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள உருக்கு ஆலையில் ஜூனியர் மேனேஜர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பாய்லர் ஆபரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 205 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூனியர் மேனேஜர் சேப்டி பணிக்கு 7 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 170 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர் ஆபரேட்டர்) பணிக்கு 28 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 4-12-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜூனியர் மேனேஜர் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 28 வயதுக்கு உட்பட்டவர்கள் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் ஜூனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஒடியா மொழியறிவு அவசியம்.
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பவர்பிளான்ட், புரொடக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
ஜூனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கும், பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்கள் ரூ.500-ம், டெக்னீசியன் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இந்த பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எஸ்சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 4-12-2018-ந் தேதி கடைசிநாளாகும்.
விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.sailcareers.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Related Tags :
Next Story