டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு: 2 அரிசி ஆலைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
காஞ்சீபுரத்தில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டர் பொன்னையா, 2 அரிசி ஆலைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்.
காஞ்சீபுரம்,
தமிழகம் முழுவதும் டெங்கு-பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா உத்தரவுபடி நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் பொன்னையா, மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது சுகாதாரகேடாக இருக்கும் நிறுவனங்கள், தொழிற் சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பாலியர் மேடு, தாயார்குளம் பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி 2 அரிசி ஆலைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 அரிசி ஆலைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
அப்போது அவருடன் காஞ்சீபுரம் நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன், சுகாதாரத்துறை டாக்டர் தீபா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story