பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் கணவருடன் பெண் தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் கணவருடன் பெண் தஞ்சம்
x
தினத்தந்தி 13 Nov 2018 4:00 AM IST (Updated: 13 Nov 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம் அடைந்தார்.

கரூர்,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவரும், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த சத்யசிவாவும் (25) திருப்பூரிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் சத்யசிவா-பிரியதர்ஷினி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பிரியதர்ஷினி தனது காதல் கணவர் சத்யசிவாவுடன் வந்து தஞ்சம் அடைந்தனர்.

மனு

அப்போது சத்யசிவா- பிரியதர்ஷினி கொடுத்த மனுவில், நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டாரிடமிருந்தும் எங்களுக்கு மிரட்டல் வருகின்றன.

எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறி அனுப்பி வைத்தனர். 

Next Story