மழைநீர் கால்வாயில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு நண்பர் படுகாயம்
சேலையூர் அருகே சாலை தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள திருவஞ்சேரி ஏரியில் இருந்து மாடம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
இதற்காக அகரம் மெயின் ரோட்டில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நேரத்தில் சாலையோரம் உள்ள தடுப்புகள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தன.
கன்னியாகுமரியை சேர்ந்தவர் பிரைட் ஆர்.துரை (வயது 21). பெங்களூருவில் தங்கி வேலைபார்த்து வந்தார். தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ‘பொலிடிக்கல் சயின்ஸ்’ படித்து இருந்தார். அதில் இவருக்கு அரியர்ஸ் இருந்தாக தெரிகிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக பிரைட் சென்னை வந்தார். பின்னர் சேலையூர் ரங்கநாதபுரத்தில் உள்ள தனது நண்பர் கேரளாவை சேர்ந்த ஜோவி (21) என்பவரது அறையில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோவியும், பிரைட்டும் மோட்டார்சைக்கிளில் திருவஞ்சேரியில் இருந்து சேலையூருக்கு வந்து கொண்டிருந்தனர். மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் வந்தபோது, இருளில் சாலை தடுப்பு மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில், பின்னால் அமர்ந்திருந்த பிரைட் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். ஜோவி சாலையின் மேல் பகுதியில் படுகாயத்துடன் விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் காயத்துடன் கிடந்த ஜோவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய பிரைட்டை யாரும் கவனிக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அங்கு கால்வாய் அமைக்கும் பணிக்கு ஊழியர்கள் வந்தனர். அப்போது பிரைட் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பிரைட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story