விளாத்திகுளம் அருகே: மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு மகன் பலி - சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்


விளாத்திகுளம் அருகே: மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு மகன் பலி - சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Nov 2018 3:30 AM IST (Updated: 13 Nov 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டுவின் மகன் பலியானான்.

விளாத்திகுளம், 

தூத்துக்குடி பி.எம்.டி. காலனியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சுபாஷ் (வயது 8), அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.சம்பவத்தன்று பால்ராஜ் தன்னுடைய குடும்பத்தினருடன் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் நடந்த உறவினரின் இல்ல விழாவுக்கு காரில் சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள், வேம்பார் அருகில் உள்ள கோவில் அருகில் காரை நிறுத்தி விட்டு, இயற்கை உபாதையை கழிக்க சென்றனர். அப்போது சுபாஷ் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுபாஷின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுபாஷை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின்பேரில், சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story