தானே அருகே பெண்ணை கடத்தி கொன்ற 2 வாலிபர்கள் கைது
தானே அருகே பெண்ணை கடத்தி கொன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஆனந்தி பரோரா(வயது60). அங்குள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, ஆனந்தி பரோராவின் காய்கறி தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளி சந்தோஷ் டோலே(வயது28) என்பவரும் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் நாசிக் அருகில் உள்ள அடகாவ் கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், அவர் தனது நண்பர் சந்தோஷ் நிம்பலே என்பவருடன் சேர்ந்து ஆனந்தி பரோராவை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன் சந்தோஷ் டோலே தனது சம்பளத்தில் இருந்து முன்பணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் 3 நாட்கள் விடுமுறை தரும்படி கேட்டு உள்ளார்.
இதற்கு ஆனந்தி பரோரா மறுத்ததுடன் மற்ற தொழிலாளர்கள் முன்பு அவரை அவமானப்படுத்தி உள்ளார். இதனால் கோபம் அடைந்த அவர் தனது நண்பர் சந்தோஷ் நிம்பலேயுடன் சேர்ந்து ஆனந்தி பரோராவை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கடத்திச்சென்று கொலை செய்து உடலை வீசியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் ஆனந்தி பரோராவின் உடல் வீசப்பட்ட இடத்திற்கு சென்று அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தோஷ் டோலேவையும், சந்தோஷ் நிம்பலேவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story