அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 74 இடங்களில் இலவச ‘வைபை’ வசதி


அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 74 இடங்களில் இலவச ‘வைபை’ வசதி
x
தினத்தந்தி 14 Nov 2018 4:15 AM IST (Updated: 14 Nov 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 74 இடங் களில் இலவச ‘வைபை’ வசதி செய்யப்படும் என்று பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் கூறினார்.

தஞ்சாவூர்,

பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் முதன்முறையாக வீடுகளுக்கும், அலுவலகங் களுக்கும் பயன்படக்கூடிய வகையில் அதிவேகம் கொண்ட, அதிக அளவிலான பதிவிறக்கத்துடன் கூடிய அகண்ட அலைவரிசையில் கண்ணாடி இழை தரைவழித்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை மூலம் வினாடிக்கு 50 எம்.பி. முதல் 100 எம்.பி. வேகத்திறன் கொண்ட அலைவரிசையை பெறலாம்.

இதில் விருப்பத்திற்கேற்ப இணைய வசதி, டேட்டா, வீடியோ கான்பரன்சிங், ஆன்லைன் வகுப்புகள், வேகத்திறன் உத்தரவாதம் ஆகியவற்றை பெறலாம். தனிநபர் மற்றும் வீடுகளுக்கு மாத வாடகை ரூ.777 திட்டத்தில் 50 எம்.பி. வேகத்தில் 500 ஜி.பி. வரையிலும், ரூ.1,277 திட்டத்தில் 100 எம்.பி. வேகத்தில் 750 ஜி.பி. வரையிலும் பெறலாம்.

மேலும் வர்த்தக நிறுவனங் களுக்கும் பயன்தரக்கூடிய ரூ.1,291 மாத வாடகையில் 100 எம்.பி. வேகத்தில் 500 ஜி.பி. வரையிலும், ரூ.2,095 மாத வாடகை திட்டத்தில் 1000 ஜி.பி. வரையிலும், ரூ.1,250 திட்டத்தில் 70 எம்.பி. வேகத்தில் 1,250 ஜி.பி. வரையிலும் பெறலாம்.

தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால், திருவாரூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை பெறலாம். இந்த சேவை கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இந்தியா முழுவதும் இலவசமாக பேசலாம்.

மேலும் செல்போன் திட்டத்தில் வாடிக்கை யாளர்களுக்கென மிக குறைந்த செலவில் ஆண்டுக்கு 365 நாட்களும் அளவற்ற எல்லா நெட்வொர்க்களுக்கும் புதுடெல்லி, மும்பை உள்பட அனைத்து அழைப்புகளுடன் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அதிக அளவில் பதிவிறக்கமும் செய்துகொள்ளும் வசதியுடன் ரூ.1,699-க்கு தினமும் 2 ஜி.பி.யும், ரூ.2,099-க்கு தினமும் 4 ஜி.பி.யும் பெற்று பயனடையலாம்.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது 54 ஆயிரம் தரைவழி இணைப்புகளும், 24 ஆயிரம் அகண்ட அலைவரிசை இணைப்புகளும் உள்ளன. தஞ்சை பெரியகோவில் சுற்றுலா தலம் என்பதால் இலவச ‘வைபை’ வசதி வழங்கப்படுகிறது. இதேபோல் தஞ்சை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் (தஞ்சை, திருவாரூர்) 74 இடங்களில் அடுத்த ஆண்டு(2019) மார்ச் மாதத்துக்குள் இலவச ‘வைபை’ வசதி ஏற்படுத்தப்படும். செயற்கைகோள் மூலம் தொலைபேசி வழங்கும் திட்டத்தையும் அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

பேட்டியின்போது உதவி பொது மேலாளர் குணசேகரன், துணை பொது மேலாளர்கள் ராஜாராமன், விவேகானந்தன், மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story