நத்தம் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


நத்தம் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 3:30 AM IST (Updated: 14 Nov 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை,

நத்தம் அருகே செந்துறை சாலையில் செல்லம் புதூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடை அமைக்கப்படும் பகுதியில் கோவில், பள்ளிக்கூடங்கள் உள்ளன. எனவே கோவிலுக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவ–மாணவிகள் ஆகியோர் மதுபான கடையை கடந்து செல்லவேண்டும். இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே டாஸ்மாக் மதுபான கடையை திறக்கக்கூடாது என்றனர்.


Next Story