பள்ளி மாணவனை தாக்கிய ஓவிய ஆசிரியர் கைது


பள்ளி மாணவனை தாக்கிய ஓவிய ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 3:37 AM IST (Updated: 14 Nov 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே பள்ளி மாணவனை தாக்கிய ஓவிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

புனே,

புனே அருகே உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ராணுவ பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சந்தீப் காதே. இவர் சம்பவத்தன்று அந்த பள்ளியில் படித்து வரும் 6-ம் வகுப்பு மாணவன் ஒருவனை, ஓவியம் வரையாததால் கண்மூடித்தனமாக அவனது முகத்தில் தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த மாணவன் இது குறித்து பெற்றோரிடம் கூறினான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவனது தந்தை ஓவிய ஆசிரியர் சந்தீப் காதே மீது சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில், திடீரென சந்தீப் காதேவை கைது செய்த போலீசார், நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே பள்ளி நிர்வாகமும் அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Next Story