பணத்தை நம்பி இடைத்தேர்தலில் போட்டியிடுவோரின் கனவு பலிக்காது - சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு


பணத்தை நம்பி இடைத்தேர்தலில் போட்டியிடுவோரின் கனவு பலிக்காது - சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 14 Nov 2018 5:30 AM IST (Updated: 14 Nov 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் பணத்தை நம்பி போட்டி யிடுவோரின் கனவு பலிக்காது என்று சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சாத்தூர்,

தி.மு.க.வின் சாத்தூர் நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வெம்பக்கோட்டை கிழக்கு, மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கம்பம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

சாத்தூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான் நமக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும். கடந்த தேர்தலின்போது 4,427 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தற்போதைய அ.தி.மு.க. இரு அணிகளாக பணத்தை நம்பி போட்டியிடுகின்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்காது.

எனவே இடைத்தேர்தலில் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபட வேண்டும். உறுதியாக இந்த இடைத்தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சரவணன், கோசுகுண்டு சீனிவாசன், கடற்கரை ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சூரியநாராயணன், கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story